மக்களே உஷார்..! இன்று 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை செப்.23 ஆம் தேதி வரைக்கும் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் இடையிடையே கனமழை பெய்து வந்தாலும் கரூர், திண்டுக்கல், திருவாரூர் மற்றும் மேலூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 3டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செய்வதை தவிர்க்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.