மக்களே உஷார்..! தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும் என்பதால் தமிழகத்தில் சில இடங்களில் மழை தொடரும் என்றும், கடலோர பகுதிகளில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதால் வரும் 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.