மக்களே உஷார்..! தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையும் 10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பும்!
தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவண்ணாமலை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர். ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, கனமழை எச்சரிக்கையால் நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள காரணத்தினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என புதுச்சேரி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.