மக்களே உஷார்..! இன்னும் ரேஷன் கார்டில் உங்கள் குழந்தையின் பெயரை இணைக்கவில்லையா?

அரசின் அனைத்து பணிகளையும் ஒரே நேர்கோட்டில் ஒன்றிணைக்கும் விதமாக அனைத்து ஆவணங்களையும் ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று கட்டாய அறிவிப்பு வெளியாகியது. மேலும் நாடு முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு “ஒரே நாடு ஒரே கார்டு” திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.
ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் கார்டும் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ரேஷன் கடையில் குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் மூலம் தான் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து வழங்கப்படும் பொருட்களின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் ரேஷன் கார்டில் உள்ள குழந்தைகளின் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் பெற்றோர்களின் கவனத்திற்கு வராமலேயே குழந்தைகளின் பெயர்களை நீக்கம் செய்து விடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரேஷன் கார்டுக்கு வர வேண்டிய பொருட்களின் அளவும் குறைந்து விடுகிறது. எனவே ரேஷன் அட்டையில் உள்ள குழந்தைகளின் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.