1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! இனி போலி வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை - மத்திய அரசு எச்சரிக்கை..!

1

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனாவை, நவீன தொழில்நுட்பம் மூலம் தவறாகச் சித்தரித்து வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை தெரிவித்திருந்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தனர்.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிப்படத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய அரசு, போலி வீடியோ சித்தரித்து வெளியிட்டால், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியிட்டு குற்றம் நிரூபணமானால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like