மக்களே உஷார்..! தெருவோரங்களில் நிற்கும் கார்களுக்கு.. சென்னை மாநகராட்சியின் புதிய எச்சரிக்கை..!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநகராட்சியின் ஆணையர் ராதாக்கிருஷ்ணன்இரவு நேரங்களில் காரின் இடி பொருட்கள், கட்டிடக்கழிவுகள் அனைத்தும் கூவத்தில் கொட்டுப்படுகிறது. மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் இவை அடைப்பை ஏற்படுத்தும்போது ஏதோ ஒரு இடத்தில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
மேலும் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு மேல் சாலை மற்றும் தெருவோரங்களில் நிற்கும் வாகனங்கள் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீண்ட நாட்களாக சாலை மற்றும் தெருவோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பயன்பாடு அற்ற கார்களை உரிமையாளர்கள் உடனடியாக அகற்ற வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை கூட வளாகங்களில் வைக்கப்படும். பொதுமக்களும் இந்த பணிகளில் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.