1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! தமிழகத்தில் முதியவர்கள், கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

1

தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும், கேரளாவிலும் புதுவகை கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இணை நோய் உள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துள்ளவர்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஃப்ளூ காய்ச்சல், கொரோனா அறிகுறிகளுடன் வருவோருக்கு பரிசோதனை செய்ய வேண்டும். தமிழகத்தில் தற்போது சுமார் 70 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். சோதனையில் கொரோனா உறுதியாவது 6.3% ஆக உள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் காய்ச்சிய குடிநீரை அருந்த வேண்டும்; வீட்டின் அருகே நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like