1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

1

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிக்ஜம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல், தொடர்ந்து சென்னையை நெருங்கிக்கொண்டிருக்கிறது. புயல் உருவான நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகபட்சம் 70 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல்

அதன்படியே செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த காற்று வீசத்தொடங்கியுள்ளது. அதேபோல் காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது. முன்னதாக வானிலை மையம் எச்சரித்திருந்ததன் பேரில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லாததால், சென்னை காசிமேடு மீன்சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக சென்னை உள்பட 5 துறைமுகங்களில் 3 எண் புயல் எச்சரிக்கை கூண்டும், 4 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 3 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like