மக்களே உஷார்...! நாளை 53 மின்சார ரயில்கள் ரத்து..!
சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:சென்னை கடற்கரையிலிருந்து புகா் பகுதிகளை இணைக்கும் வகையில் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் மாணவா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பயனடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், சென்னை எழும்பூா் - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை பணிமனையில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 மணி வரையிலும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 மணி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 11 முதல் பிற்பகல் 2.20 மணி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், காஞ்சிபுரம் (காலை 9.30), திருமால்பூரில் (காலை 11.05) இருந்து புறப்படும் ரயில்களும் செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு (காலை 10) புறப்படும் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு ரயில்கள்: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.51, பகல் 12.35, 1.15, 1.35, 1.55, பிற்பகல் 2.45, 3.10 மற்றும் 3.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, 11, 11.30, பகல் 12, 1, 1.45, பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது