1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : மக்களே உஷார்..! இனி போலி வீடியோ பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை..!

1

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு லிப்டில் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு செல்வது போல மார்பீங் செய்யப்பட்ட வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் பேசுபொருள் ஆகியது.. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். 

மேலும், அது மார்பீங் செய்யப்பட்ட வீடியோ என்று கூட தெரியாமல் பலரும் ரஷ்மிகா இப்படியா உடை அணிவீர்கள்? என்பது போல கேள்வி எழுப்பினார்.ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அமிதாப் பச்சன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் “ராஷ்மிகா மந்தனா குறித்து பரவும் வீடியோ போலி இப்படி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த பதிவை நான் வேதனையுடன் பகிர்கிறேன். இணையத்தில் வேகமாக பரப்பப்படும் 'டீப் பேக்' முறையில் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ பற்றி பேச வேண்டும். தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது. இன்று, ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும், எனக்கு பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். நான் பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இது நடந்திருந்தால் அதனை நான் எப்படி சமாளித்துருப்பேன் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இதுபோல் நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு முன், இதை நாம் தீவிரமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இனிமேல் இப்படி தவறாக மார்பீங் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த தவறான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், போலியான வீடியோ தொடர்பாக சமூகவலைதள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like