1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

1

வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படியே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பரவலாக மிதமான மழை பெய்தது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், காமராஜர் சாலை, கோபாலபுரம், பட்டினப்பாக்கம், அரும்பாக்கம், தேனாம்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், பாரிமுனை , அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்றைய தினம் நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like