1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகளே உஷார்..! சென்னையில் இந்த தேதிகளில் போக்குவரத்து மாற்றம்..!

1

நாட்டின் 76-வது சுதந்திர தினவிழா வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர நாள் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.  சுதந்திர தினவிழாவை ஒட்டி காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதற்காக சில நாள்களுக்கு முன்னரே ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும். 

இந்நிலையில், 76 வது சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 4 ,10, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.  இதனால், ஆகஸ்ட் 4 ,10, 13 ஆகிய தேதிகளில் போக்குவரத்துமாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமரச்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் என போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like