1. Home
  2. தமிழ்நாடு

வைஃபை டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருந்தால் ஜாக்கிரதை..

வைஃபை டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருந்தால் ஜாக்கிரதை..


பணப்பரிவர்த்தனையை எளிதாக்க ஏடிஎம் கொண்டுவரப்பட்டது. மேலும் எளிமையாக்கும் வகையில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் வைஃபை வசதி கொண்டுவரப்பட்டது.

வைஃபை வசதி இருக்கும் கார்டுகளை கொடுத்து எளிதாகவும், விரைவாகவும் பொருட்களை வாங்கிச்செல்லலாம் என்பதால் பெரும்பாலான கார்டுகள் வைஃபாகளாக மாற்றிவிட்டனர்.

இந்நிலையில் சென்னையில் வைஃபை வசதியுள்ள டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை திருடி, 6 லட்சம் ரூபாய் வரை நூதன முறையில் மோசடி செய்த முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைஃபை டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருந்தால் ஜாக்கிரதை..

சென்னை போரூரைச் சேர்ந்த ஹரி விஸ்வநாதன் என்பவரின் டெபிட் கார்டு திருடப்பட்டு, அதில் இருந்து 70ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன் போலீசில் புகார் அளித்தார். புகார் குறித்து தீவிர விசாரணை நடத்திய சைபர் க்ரைம் போலீசார், காட்டுப்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியரான சரவணன் என்பவரை கைது செய்தனர்.

இவர் ஏடிஎம் மையங்களிலும் வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் விட்டுச் செல்லும் வைஃபை வசதியுள்ள டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை திருடி பணம் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. கடைகள், ஏடிஎம் செல்லாமல் தானாகவே பணம் எடுக்க திட்டமிட்டார்.

இதற்காக போலியான ஆவணங்களை கொடுத்து ஸ்வைப்பிங் மெஷின் ஒன்றை வாங்கி, அதன் மூலம் கடந்த 3 மாதங்களில் 6 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துள்ளார்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தனது குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக, இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். பின்னர் அவரிடம் இருந்து ஸ்வைப்பிங் மெஷின், 13 டெபிட் கார்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like