1. Home
  2. தமிழ்நாடு

தீபாவளியன்று லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்‌..!

1

தீபாவளி பண்டிகை அன்று எண்ணெய்க் குளியலும் மிக முக்கிய பங்காற்றுகிறது. நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், சீயக்காய்ப் பொடியில் சரஸ்வதியும், தண்ணீரில் கங்கையும், சந்தனத்தில் பூமா தேவியும், குங்குமத்தில் கௌரியும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்புப் பலகாரத்தில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும் ஆவாஹனமாகி அருள் பாலிப்பர் என்பது ஐதிகம். எனவே தான் எண்ணெய்க் குளியல் நீராடலை கங்கா ஸ்நானம் என புனிதமாக அழைக்கின்றனர்.

இந்தாண்டு தீபாவளி திருநாள் வரும் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நாளில் செல்வ வளத்தை பெருக்கும் லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை பற்றி தெரிந்துகொள்வோம்.

தீபாவளி நாளில் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் அல்லது காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் எண்ணெய்க் குளியல் மேற்கொள்ளவது சிறப்பு. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது வெறும் சடங்கு அல்ல. தீபாவளி நாளில் செய்யும் எண்ணெய் குளியல் நீராடலை 'கங்கா ஸ்நானம்' என்று புனிதமாகச் அழைக்கின்றனர். தீபாவளி தினத்தன்று லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் பற்றி பார்ப்போம்.

தீபாவளியன்று லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்‌ :

அதிகாலை 04.00 மணி முதல்‌ 06.00 மணி வரை ஆகும்

காலை 09.13 மணி முதல்‌ 10.43 மணி வரை

பிற்பகல்‌ 01.13 மணி முதல்‌ 01.28 மணி வரை

மாலை 06.00 மணி முதல்‌ 07.00 மணி வரை

இரவு 08.00 மணி முதல்‌ 09.00 மணி வரை

லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார் என்பது ஐதீகம்.

Trending News

Latest News

You May Like