1. Home
  2. தமிழ்நாடு

இன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகுந்த நேரம் அறிவிப்பு..!!

Q

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர். 

கோயிலின் பின்புறத்தில் சிவனே மலையாக எழுந்தருளியிருப்பதால், மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை கிரிவலம் வந்து வழிபடுகின்றனர்.

1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள திருவண்ணாமலையை பௌர்ணமி நாளில் வலம் வந்தால் தனிச்சிறப்பு.

அந்த வகையில் ஆனி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் ஜூன் 21ஆம் தேதி காலை 7:46 மணிக்கு துவங்கி மறுநாள் காலை சனிக்கிழமை ஜூன் 22ஆம் தேதி காலை 7 21 மணிக்கு முடிவடைகிறது

இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, அறிவித்துள்ளது.

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது.

அந்த வகையில் ஜூன் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை வண்டி எண். 06127 திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து 12 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண். 06128 திருவண்ணாமலை-தாம்பரம் பௌர்ணமி கிரிவலம் சிறப்பு ரயில் திருவண்ணாமலை இருந்து ஜூன் 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

Trending News

Latest News

You May Like