மூத்த குடிமக்களுக்கான சிறப்பான சேமிப்பு திட்டம்... மாதம் 20,500 ரூபாய் கிடைக்கும்..!

மத்திய அரசானது மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு அவர்களது முதுமை காலத்தில் உதவும் வகையில் “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை” போஸ்ட் ஆபீஸ் மூலமாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணையும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,500/- வருமானாக வழங்கப்படும். அதாவது இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு மாதம் ரூ.20,500/- வட்டியாக மத்திய அரசு மூலம் செலுத்தப்படுகிறது. இத்தகைய சேமிப்பு திட்டத்தின் பலனை 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பெற இயலும். அதுமட்டுமின்றி சூப்பர் ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றவர்களும் இதன் பலனை பெறலாம்.
Senior Citizen Saving Scheme எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது... விஆர்எஸ் என்று சொல்லப்படும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்... அதேபோல சூப்பர்ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றுக்கொண்ட நபர்களும் இந்த திட்டத்தை துவங்கலாம்.
எஸ்சிஎஸ்எஸ் கணக்கினைத் தொடங்க மூத்த குடிமக்கள் எதேனும் வங்கி அல்லது தபால் நிலையத்தை அணுகலாம். ஒரு லட்ச ரூபாய்க்கு குறைவாக முதலீடு செய்ய விரும்புவோர் ரொக்கமாகவே டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் இருந்தால் காசோலை மூலமாகவே கணக்கைத் தொடங்க முடியும்.
இத்திட்டத்தில் இணையும் நபர்கள் 1000 மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதவாது பயனர்கள் 1000 ரூபாய் முதல் 30 லட்சம் வரை இதில் முதலிடலாம். இவ்வாறு முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு அரசானது 8.2 சதவீதம் வட்டி செலுத்துகிறது. இந்த வட்டி தொகையானது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பயனர்களின் கணக்கில் செலுத்தப்படும். இச்சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும் வருமான வரி சட்ட பிரிவு 80C-ன் படி, பயனர்கள் 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், 8 சதவீத வட்டி கிடைக்கும்.. அதாவது, SCSS கால்குலேட்டரின்படி, 5 வருடங்களில் நீங்கள் 6,00,000 ரூபாய் வட்டியாக 15 லட்சத்திற்கு மட்டுமே பெறுவீர்கள்.