1. Home
  2. தமிழ்நாடு

பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

1

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் திடலில் நேற்றைய ஐபிஎல் (ஏப்.25) போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பெங்களூரு அணியும் மோதியது. 

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஹைதராபாத் அணியை முதலில் பந்துவீச அழைத்தது..இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், பாப் டு பிளஸ்ஸிஸ் 12 பந்துகளில் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்களை விளாசினார்.  மறுபுறம் நிதானம் காட்டிய விராட் கோலி 43 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், நடுவரிசை வீரராக களமிறங்கிய ரஜத் படிதார் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 20 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுக்க, அவருக்கு பக்கபலமாக கேமரூன் கிரீன் சிக்ஸர் 37 ரன்கள் எடுத்து கைகொடுக்க அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் திரட்டியது..இதையடுத்து, 207 ரன்கள் வெற்றி இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.

இந்த ஸ்கோரை ஐதராபாத் அணி எளிதாக எட்டிவிடும் என நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஆர்சிபி. ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம் 7, நிதிஷ் ரெட்டி 13, கிளாசன் 7, அபிஷேக் 31, சமத் 10 என விக்கெட்டுகளை இழந்தனர்.இறுதி வரை போராடிய ஷபாஸ் அகமது 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனால் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Trending News

Latest News

You May Like