1. Home
  2. தமிழ்நாடு

பெங்களூரில் 5 நாட்களுக்கு மதுபான விற்பனைக்கு தடை..!

1

 ஜூன் 1 முதல் ஜூன் 6-ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு அங்கு மதுபான விற்பனைக்கு தடை விதித்திருக்கிறது கர்நாடகா அரசு. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதாலும், கர்நாடகா சட்டமேலவைத் தேர்தல் நடைபெறவுள்ளதாலும், அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக இந்த முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது.

7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4-ம் தேதி வெளியாகவுள்ளன. இதற்காக ஜூன் 3-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூன் 4-ம் அதிகாலை 12 மணி வரை மதுபான விற்பனைக்கு பெங்களூரில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.அதேபோல, கர்நாடகா சட்ட மேலவைத் தேர்தல் வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஜூன் 1 முதல் 3-ம் தேதி வரையில் பெங்களூரில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் ஜூன் 6-ம் தேதி வெளியாகின்றன. எனவே அன்றைய தினமும் பெங்களூரில் மதுபானக் கடைகள் இயங்காது என போலீஸார் தெரிவித்துள்ளனர். எனவே ஜூன் 1 முதல் ஜூன் 6-ம் தேதி வரையிலான (ஜூன் 5-ம் தேதி தவிர) 5 நாட்களுக்கு பெங்களூரில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like