ஒரு திரைப்பட நடிகராக இருப்பதால் இயல்பாகவே தமிழகத்தில் கூட்டம் கூடுகிறது - வானதி சீனிவாசன்..!
மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பாக பாஜக எம்.எல்., வானதி சீனிவாசன் கூறியதாவது:-
"மாற்றத்தை நோக்கி மக்களை திருப்புவதற்காக விஜய் அரசியலில் இறங்கியுள்ளார். அதனால் அவர் திமுகவை பார்த்து கேட்கின்ற கேள்வி நியாயமானதுதான். ஏற்கெனவே இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள், அவர்களின் கொள்கைகள் ஆகியவற்றை எடுத்து விஜய் பேசியுள்ளார். இதற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து அவரின் வெற்றி அமையும்..அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றியோ அவர்களுடைய கொள்கைகளைப் பற்றியோ பேசுவதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அதனால் விஜய் உடைய கட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து அதற்குப் பின்பாக கருத்து தெரிவிப்போம்.
ஒரு அரசியல் கட்சி உதயம் என்பது மட்டுமல்ல ஒரு திரைப்பட நடிகராக இருந்தாலும் இயல்பாகவே தமிழகத்தில் கூட்டம் இருக்கிறது. செயல்பாடுகளை பார்த்து தான் மற்ற அனைத்தும். எல்லாருமே ஒவ்வொரு வகையான தியாகத்தை செய்து அதன் பிறகுதான் அரசியலுக்கு வருகிறார்கள். ஒரு நபர் குறைவான வருமானம் வாங்குவதால் தியாகம் குறைவானது என்று அர்த்தம் இல்லை. தியாகத்தில் பெரியது சின்னது என்பது கிடையாது. அன்றாட கூலி வேலையை விட்டுவிட்டு ஒருவர் அரசியல் சேவைக்காக பணிபுரிய வருபவர்கள் என்றால் அவர்களுடைய தியாகமும் பெரிது தான். உங்களுடைய பிசினஸ், மார்க்கெட் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்ய அரசியலுக்கு வந்தால் யார் வந்தாலும் அதை நாங்கள் வரவேற்போம்.அரசியல் களத்திற்கு நிறையபேர் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பாசிசம்; பாயாசம்' பிறகு டீசென்ட் அட்டாக் இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாமே பார்ப்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. திரைப்படத்தில் அவர் பேசும் வசனத்தை எல்லோருமே ரசித்ததுண்டு. அதேபோல் இந்த வசனங்கள் எல்லாம் வரக்கூடிய காலங்களில் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்த்து சொல்வது தான் சரியாக இருக்கும்''
எத்தனை கூட்டம் வந்தாலும் வாக்கு பெட்டியில் என்ன விழுகிறது என்பதுதான் விஷயம். விஜய் ஒரு தேர்தலை பார்த்தபிறகு முடிவு செய்து கொள்ளலாம். ஆட்சியதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட கருத்துகளை விஜய் கூறியது வரவேற்கத்தக்கது." என்றார்.