கருட பஞ்சமி வழிபாட்டினை துவங்குவதற்கு முன் ஒரு சிவப்பு கயிறில் 10 முடிச்சுகள் போட்டு...
கருட பஞ்சமி 2024 வழிபாட்டு நேரம் :
ஆகஸ்ட் 09ம் தேதி முழுவதும் பஞ்சமி திதி உள்ளது.
காலை - 9 முதல் 10.20 வரை
பகல் - 12.05 முதல் 01.05 வரை
கருட பஞ்சமி வழிபாட்டு முறை :
கருட பஞ்சமி அன்று கெளரி மாதாவை வழிபட வேண்டும். கெளரி மாதா, நாகாபரணங்களை அணிந்தவள். கருடனையும் கெளரியையும் இந்த நாளில் வழிபடுவது மிக சிறப்பானது. கருடனின் படம் வீட்டில் இருந்தால் வழிபடலாம். இல்லை என்றால் ஏதாவது ஒரு அம்பாள் படத்தை வைத்து, அவளை கெளரியாக பாவித்து வழிபடலாம். கருடர் படம், கருடனுடன் இருக்கும் பெருமாள் படம் இருந்தால் அதற்கு துளசி மாலை சாற்றி, கொழுக்கட்டை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். அம்மன் படம் இருந்தால் பூக்கள், சந்தனம், குங்குமம் வைத்து வழிபடலாம். கருடன் அல்லது பெருமாளுக்குரிய மந்திரங்கள் சொல்லி வழிபட வேண்டும். கருட பஞ்சமி வழிபாட்டினை துவங்குவதற்கு முன், ஒரு சிவப்பு கயிறில் 10 முடிச்சுகள் போட்டு கருடனுக்கு அல்லது அம்பாளுக்கு வலது புறம் இருக்கும் படி வைத்து, பூஜை செய்து, பிறகு அதை ரக்ஷையாக கையில் கட்டிக் கொள்ளலாம். இதனால் பயம், தயக்கம், பதற்றம், வாகன விபத்துக்கள், கண் திருஷ்டி போன்றவை நீங்கும்.
சொல்ல வேண்டிய மந்திரங்கள் :
கருட காயத்ரி :
தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்.