1. Home
  2. தமிழ்நாடு

வகுப்பறைக்கு படுக்கை, மெத்தையுடன் செல்லும் மாணவி! வீடியோ!!

வகுப்பறைக்கு படுக்கை, மெத்தையுடன் செல்லும் மாணவி! வீடியோ!!


காலையில் சீக்கிரம் எழுந்து வகுப்புக்கு செல்ல முடியாததால் மாணவி ஒருவர் படுக்கையுடன் வகுப்புக்கு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பாடம் கவனிக்க வேண்டும் என்றால் தான் மாணவர்களுக்கு அதிக தூக்கம் வரும். இதில் இருந்து விடுபட நினைத்த மாணவி ஒருவர் படுக்கையுடன் காலையில் வகுப்பறைக்கு சென்றுவிட்டார்.

அந்த மாணவி தனது மெத்தையை பல்கலைக்கழக வகுப்பிற்குள் எடுத்து வந்து மேஜையில் போட்டு 9 மணிக்கு வகுப்புக்கு எல்லோரும் வருவதற்கு முன்பாக அவர் பெட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவை டிக்டாக் பயனர் மக்தா @kapciaks என்னும் அக்கவுண்டில் இருந்து வெளியிட்டு இருக்கிறார். வெளியிட்ட அவர் அதற்கு கீழ், "9 மணிக்கு வகுப்பு இருக்கும்போது, அப்போதும் நமக்கு தூங்கவும் வேண்டும் என்றால்" என்று எழுதி இருக்கிறார்.

இந்த நிகழ்வு லெய்ஸெஸ்டர்ஷைரில் உள்ள லோஃப்போரோ யூனிவர்சிட்டியில் நடந்திருக்கலாம் என தெரியவருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like