1. Home
  2. தமிழ்நாடு

உஷாரா இருங்க மக்களே..! வாட்ஸ் அப்பில் நடக்கும் நுாதன மோசடி..!

Q

மோசடி கும்பல் பணம் பறிப்பதற்கு வாட்ஸ் அப் பயனர்களை குறி வைத்து வருகின்றனர். அதில் ஒருவகை மோசடி என்பது தான் ஸ்டீகனோகிராபி (Steganography).

ஸ்டீகனோகிராபி (Steganography) என்பது படம், வீடியோ அல்லது ஆடியோ கோப்பிற்குள் மறைக்கப்பட்ட தகவல்களை (malicious code, links, malware) மறைத்து அனுப்பும் முறை தான்.

வாட்ஸ் அப் 'ஹேக்கர்ஸ்' இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, படங்களை அனுப்பி பயனர்களின் தகவல்களை திருடுகின்றனர்.

போனை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர 'ஹேக்கர்ஸ்' முயற்சிக்கின்றனர். அதாவது ரிமோட் ஆக்சஸ் மூலம் போன் கட்டுப்பாட்டை தன்வசம் கொண்டு வருகின்றனர்.Keylogger மூலம், பேங்க் தகவலை திருடுகின்றனர்.

இந்த மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

* வாட்ஸ் அப்பில் ஆட்டோ டவுன்லோட் செய்வதை முடக்க வேண்டும். முதலில் Settings பட்டனை கிளிக் செய்து, Storage & Data கிளிக் செய்து, Media Auto-Download கிளிக் செய்து, None ஆப்சனை கிளக் செய்ய வேண்டும்.

* தெரியாதவர்கள் படம் அனுப்பினால் கிளிக் செய்ய கூடாது. இதில் இருந்து தப்பிக்க Two-Step Verification ஆன் செய்யலாம். தெரியாமல் இது மாதிரி படங்களை ஓபன் செய்தால் என்ன செய்வது?

முதலில் இண்டர்நெட்டை துண்டிக்க வேண்டும். பின்னர் Airplane Mode ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். வாட்ஸ் அப்பில் அனைத்து இணைப்புகளையும் துண்டிக்க வேண்டும். ஆன்டிவைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டும். 

Trending News

Latest News

You May Like