1. Home
  2. தமிழ்நாடு

ஏமாறாமல் உஷாராக இருங்கள்..! யோகி பாபு முலம் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட சென்னை போலீசார்..!

1

பொதுமக்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் இணையதள மோசடியாளர்கள் மோசடிகள் தொடர்பான ஏராளமான புகார்கள் சென்னை காவல்துறை பெற்றுள்ளது. 

குறிப்பாக FedEX வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக சொல்லி பாதிக்கப்பட்ட நபரின் பெயரில் பார்சலில் வந்துள்ளதாகவும் அந்த பார்சலில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் இருப்பதால் அந்த அழைப்பை மும்பை அந்தேரி காவல் துறைக்கு மாற்றுவதாக முதலில் கூறுவார்.

மும்பை காவல்துறை அதிகாரி என்று சொல்லி பேசிய நபர் அந்த பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதால் பாதிக்கப்பட்ட நபரிடம் அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க அவரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அனுப்பி வைக்கவேண்டும் என்றும் தவறினால் நீங்கள் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுவார். இது போல் பல மோசடிகள் நடைபெற்றுள்ளது.  

மோசடி செய்பவர்கள் CBI, ED மற்றும் மும்பை காவல்துறையின் அதிகாரிகள் பெயரில் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி உள்ளனர். 

இந்நிலையில், FedEx, TRAI மோசடி குறித்த நடிகர் யோகிபாபு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை சென்னை பெருநகர காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது.இதுவரை FedEx, TRAI மோசடி குறித்த புகாரின் பேரில் ரூ.10 கோடி வரை மீட்கப்பட்டுள்ளதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது http://www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகர் யோகிபாபுவின் விழிப்புணர்வு காணொளியை கண்டு ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து ஏமாறாமல் உஷாராக இருங்கள்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like