உஷாரா இருங்க..! அலெர்ட் கொடுத்த தமிழ்நாடு போலீஸ்!
சைபர் க்ரைம் வெளியிட்ட அறிக்கையில், இது இந்த மோசடி செயல்பாட்டின் தீவிர தன்மையை வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
போன் பே மூலம் அனுமதி இல்லாத பணப்பரிவர்த்தனைகளைப் பற்றிய விசாரணையில் PM Kitan Yojna என்ற மோசடி செயலி பயன்படுத்தபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த செயலி பல்வேறு சேனல்கள் மூலம் குறிப்பாக WhatsApp மூலம் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் இது பயனாளிகளில் எஸ்எம்எஸ் பயன்பாட்டையும் மற்றும் சாதனங்களை இயக்குவதையும் கட்டுப்படுத்தகூடியது. மோசடிக்காரர்கள் எஸ்எம்எஸ் போக்குவரத்தை தடுத்து அதன்மூலம் UPI செயலிகளில் மாற்றம் செய்து பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு மோசடியாக சேகரிக்கபட்ட தரவுகளை கொண்டு UPI செயலிகளில் பயன்படுத்தி அனுமதி இல்லாத பரிவர்த்தனைகளை மோசடியாக செய்கின்றனர்.
இந்த செயலிகள் பெயர், ஆதார் எண், பான் (PAN) மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகளை இணையத்திலிருந்து எடுத்துகொள்கிறது. இந்த அதிநவீன மோசடி தாக்குதல் பலருக்கு நிதி மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
- உங்கள் பேங்க் அக்கவுண்ட் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக உங்கள் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.
- தெரியாத இணைப்புகளை (லிங்க்) கிளிக் செய்வதை, தேவையில்லாத செய்திகள் அல்லது மெயில்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும்.
- எந்த சூழ்நிலையிலும் முக்கிய யுபிஐ (UPI) தரவுகளை அல்லது OTP-யை பகிர்வதை தவிர்க்கவும்.
- நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணைய தளங்களை பயன்படுத்தவும்.
- எப்போதும் அதிகாரப்பூர்வ ஆப்களை மட்டுமே டவுன்லோட் செய்து பயன்படுத்தவும் மற்றும் தெரியாத அல்லது உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்வதை தவிர்க்கவும்.
- நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930ஐ தொடர்பு கொண்டு புகாரளிக்கவும். www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.