1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் கூகுள் ப்ளேஸ்டோரில் சேர்க்கப்பட்ட பேடிஎம் செயலி.. இதுதான் காரணம் !!

மீண்டும் கூகுள் ப்ளேஸ்டோரில் சேர்க்கப்பட்ட பேடிஎம் செயலி.. இதுதான் காரணம் !!


இந்தியாவின் அனைத்து கடைகளிலும், பெரிய வணிக நிறுவனங்களிலும் டிஜிட்டல் பணபரிவர்தனை தொடங்கியுள்ளது. இதில் முக்கிய பங்கு வகிப்பது பேடிஎம் என்ற செயலி 50 மில்லியனுக்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் பேடிஎம் செயலியை கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது. அதனால் அதனை பயன்படுத்தி வந்தவர்கள் அதிச்சி அடைந்தனர்.
மீண்டும் கூகுள் ப்ளேஸ்டோரில் சேர்க்கப்பட்ட பேடிஎம் செயலி.. இதுதான் காரணம் !!

ஆனால் சூதாட்டங்களை ஊக்குவிக்கும் ஆன்லைன் கேசினோக்கள் மற்றும் பிற சூதாட்ட பயன்பாடுகளுக்கு ப்ளே ஸ்டோர் தடை செய்துள்ளது. இதனால் பேடிஎம் ஆப் ஆன்லைன் விளையாட்டுகளிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் வாடிக்கையாளர்களை பங்குபெறச் செய்ததாக கூகுள் குற்றம்சாட்டியது.

மேலும் எந்தவொரு செயலியும் தங்களது பயனாளர்களை இதர இணையதளங்களில் பந்தயங்களில் பங்கேற்கச் செய்து அவர்களுக்கு பணமும், ரொக்கப் பரிசுகளும் வழங்கினால் அது கூகுளின் விதிமுறையை மீறிய செயல் என்று விளக்கமளித்தது.

மீண்டும் கூகுள் ப்ளேஸ்டோரில் சேர்க்கப்பட்ட பேடிஎம் செயலி.. இதுதான் காரணம் !!

கூகுளின் விதிமீறும் செயல்களில் மீண்டும், மீண்டும் ஈடுபடுவதாக புகார் வந்ததையடுத்து ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் நீக்கப்பட்டது அந்நிறுவனம் விளக்கம் அளித்தது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் அது சரி செய்யப்பட்டு மீண்டும் ப்ளே ஸ்டோரில் இடபெற்றது.

அதாவது கூகுளின் நடடிவக்கையை அடுத்து தனது செயலியில் இருந்து விதிமீறல்களை பேடிஎம் நிறுவனம் சரிசெய்தது.பேடிஎம் வழிகாட்டு நெறிமுறைகளை சரிசெய்த சில மணி நேரங்களில் கூகுளின் ப்ளே ஸ்டோரில் மீண்டும் இடம்பெற்றது. இதனை பேடிஎம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.


newstm.in

Trending News

Latest News

You May Like