சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ..!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்தியாவின் முதல் ஆட்டம், அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகளை கண்டுகளிக்க வரும் முக்கிய பிரபலங்களுக்கு பிசிசிஐ கோல்டன் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இதுவரை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோருக்கு இந்த டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நடிகர் ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்து உலக கோப்பை போட்டிகளை கண்டு ரசிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை ரஜினிகாந்திடம் வழங்கினார்.
The Phenomenon Beyond Cinema! 🎬
— BCCI (@BCCI) September 19, 2023
The BCCI Honorary Secretary @JayShah presented the golden ticket to Shri @rajinikanth, the true embodiment of charisma and cinematic brilliance. The legendary actor has left an indelible mark on the hearts of millions, transcending language and… pic.twitter.com/IgOSTJTcHR
The Phenomenon Beyond Cinema! 🎬
— BCCI (@BCCI) September 19, 2023
The BCCI Honorary Secretary @JayShah presented the golden ticket to Shri @rajinikanth, the true embodiment of charisma and cinematic brilliance. The legendary actor has left an indelible mark on the hearts of millions, transcending language and… pic.twitter.com/IgOSTJTcHR