பாவா லட்சுமணன் எமோஷனல்..! நடிகர் ஜீவா பல வருடங்களாகவே எனக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் அனுப்பிட்டு இருக்காரு!
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக பல வருடங்களாக வேலை செய்தவர் தான் பாவா லட்சுமணன்..அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் மாயி திரைப்படத்தில் இடம்பெற்ற வாமா மின்னல் டயலாக் பெரிய அளவில் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அதுபோல வடிவேல் கூட்டணியில் இவரும் அதிகமாக நடித்து இருப்பார். அதிலும் ஆனந்தம்,வின்னர், கோவை பிரதர்ஸ், மாயி, கலகலப்பு போன்ற பல படத்திலும் இவர் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் எங்க வீட்டு மீனாட்சி சீரியலில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் இவருக்கு சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட பிறகு காலில் வந்த புண் காரணமாக ஒரு விரலை நீக்கி இருந்தனர்.
இப்போது அவருக்கு முன்பு போல சினிமாக்களில் அதிகமான வாய்ப்பு வரவில்லை என்றாலும் தொடர்ச்சியாக பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். அதில் தான் ஆரம்பகாலத்தில் சினிமாவில் பார்த்த விஷயங்கள் பலவற்றையும் பகிர்ந்து இருக்கிறார். அந்த வரிசையில் நடிகர் ஜீவா தனக்கு இப்ப வரைக்கும் மாதா மாதம் 15 ஆயிரம் ரூபாய் அனுப்பி கொண்டிருக்கிறார் என்பது குறித்து பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் நான் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது ஜீவா ஸ்கூல் படித்துக்கொண்டிருந்தார். சின்ன பையன் ஆகவே நான் பார்த்திருக்கிறேன். அப்ப இருந்து நான் அவருடைய நிறுவனத்தில் வேலை பார்த்ததால் என் மீது அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு. அதற்குப் பிறகு எனக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிய போது ஜீவா எனக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் அனுப்ப தொடங்கினார் இப்ப வரைக்கும் அனுப்புகிறார்.
நான் கேட்டது கூட கிடையாது ஆனால் அவராகவே அனுப்பிவிடுவார். அதுபோல நான் உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிடலில் இருக்கும் போது ஆர்பி சவுத்ரி சார்தான் எனக்கு பெறும் தொகையை அனுப்பி வைத்து என்னுடைய மருத்துவ செலவுகளை கவனித்துக் கொண்டார். நான் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்க்கும் போது ஜீவா எல்கேஜி படித்துக்கொண்டிருந்தார்.
ஜீவாவின் குடும்பத்தின் பெருந்தன்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.