1. Home
  2. தமிழ்நாடு

கூடைப்பந்து வீராங்கனை சென்னையில் உயிரிழப்பு.. மரணத்திற்கு காரணம் பீட்சா, பர்கர்..??

1

பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கோவையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த எலினா லாரேட் ,15, சக பள்ளி மாணவிகளுடன் பங்கேற்றுள்ளார்.


போட்டி முடிந்து கடந்த 15ம் தேதி ரயில் மூலம் தமிழகம் புறப்பட்டுள்ளார். ரயிலில் வந்த மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்ற மாணவி எலினா, உடல் பிரச்னை குறித்து அவர்களிடம் கூறியுள்ளார்.

பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே நேற்று எலினா உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


மாணவியின் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் வரும் போது பர்கர், சிக்கன் ரைஸ், பீட்சா உள்ளிட்டவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனைவரும் சாப்பிட்டதாகவும், அதன்பிறகு, எலினாவுக்கு வயிற்றுவலி, வாந்தி போன்ற உபாதைகளால் அவதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.


மாணவியின் மரணத்திற்கு பீட்சா, பர்கர் தான் காரணமா? என்பது, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like