1. Home
  2. தமிழ்நாடு

நள்ளிரவு 1 மணி வரை பார், பப் திறக்க அனுமதி!

1

பெங்களூருவில் பல மாநில மக்கள் வசித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அதனால் எந்நேரமும் சாலைகளில் மக்கள் மற்றும் வாகன நடமாட்டத்தை காணலாம்.

இந்நிலையில், மாநில அரசின் வருவாயை மேலும் அதிகரிக்க, பெங்களூருவில் உரிமம் பெற்ற பார்கள், கிளப்புகள், உணவகங்கள் உள்ளிட்டவை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை இயங்க கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவும் அதிகாரப்பூர்வமாகப் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, பப்கள், ரெஸ்டாரென்ட்களை அதிகாலை 2 மணிவரை திறந்து வைக்க அனுமதி கோரி ஹோட்டல் அசோசியேஷன் நிர்வாகிகள் கர்நாடக அரசுக்குக் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like