1. Home
  2. தமிழ்நாடு

கைதான 4 வழக்கறிஞர்களும் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை - பார் கவுன்சில் அதிரடி..!

1

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 5ம் தேதி மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னையில் உள்ள வீட்டின் அருகேசிலருடன் பேசி கொண்டிருந்தபோது ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை வெட்டி கொன்றது.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷின் சகோதரர் சகோதரர பொன்னை பாலு உள்ளிட்ட அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸை சேர்ந்தவர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி மட்டும் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதனால் இந்த கொலை வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்இந்த வழக்கில் வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்களும் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹரிஹரன், அசுவத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோருக்கு 4 பேரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முடியும் வரை வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending News

Latest News

You May Like