1. Home
  2. தமிழ்நாடு

ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை..!

1

இந்தியாவின் முதன்மை வங்கியான ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிடுகிறது. எல்லா வங்கிகளும் நாடு முழுவதும் ஒரே நாளில் மூடப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

எனவே ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் எப்போது, எங்கு மூடப்படும் என்பதை இன்றைய அறிக்கையில் பார்ப்போம். 


ஏப்ரல் வங்கி விடுமுறை நாட்கள் 2025: 

ஏப்ரல் 1: வங்கிகள் தங்கள் வருடாந்திர கணக்குகளை முடிப்பதற்காக விடுமுறை 
ஏப்ரல் 5: பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்தநாள் 
ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை ராம் நவமி. இந்துக்களின் பெரிய பண்டிகைகளில் இதுவும் ஒன்று. இந்த நாளை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் வங்கிகள் மூடப்படும்.
ஏப்ரல் 10: மஹாவீர் ஜெயந்தி 
ஏப்ரல் 12, மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு வார விடுமுறை.
ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
ஏப்ரல் 14: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / தமிழ் புத்தாண்டு தினம் 
ஏப்ரல் 15: பெங்காலி புத்தாண்டு தினம் 
ஏப்ரல் 16: போஹாக் பிஹு காரணமாக குவஹாத்தியில் வங்கிகள் மூடப்படும்.
ஏப்ரல் 18: புனித வெள்ளி 
ஏப்ரல் 21: கரியா பூஜை - அகர்தலாவில் வங்கிகள் மூடப்படும்.
ஏப்ரல் 26, மாதத்தின் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு வார விடுமுறை.
ஏப்ரல் 27: ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
ஏப்ரல் 29: பகவான் ஸ்ரீ பரசுராமர் ஜெயந்தி 
ஏப்ரல் 30: பசவ ஜெயந்தி மற்றும் அட்சய திருதியை காரணமாக பெங்களூரில் வங்கிகள் மூடப்படும்.

Trending News

Latest News

You May Like