1. Home
  2. தமிழ்நாடு

ஏப்ரல் மாதத்தில் பண்டிகைகள் உட்பட 14 நாட்கள் வங்கிகள் இயங்காது..!

1

வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.

பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

Bank

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. ஏப்ரல் மாதத்தில் சுமார் 14 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

ஏப்ரல் 1, 2024 - திங்கட்கிழமை - ஆண்டு கணக்கு முடிக்கும் நாள்
ஏப்ரல் 5, 2024 - வெள்ளிக்கிழமை - பாபு ஜக்ஜீவன் ராம் மற்றும் ஜுமாத்-உல்-விடா பிறந்தநாள் (தெலுங்கானா, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்)
ஏப்ரல் 7, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 9, 2024 - செவ்வாய்க்கிழமை - குடி பத்வா/உகாதி/பண்டிகை தெலுங்கு புத்தாண்டு மற்றும் முதல் நவராத்திரி (பேலாப்பூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர்)
ஏப்ரல் 10, 2024 - புதன்கிழமை - ஈத் (கேரளா)
ஏப்ரல் 11, 2024 - வியாழக்கிழமை - ஈத் பண்டிகை
ஏப்ரல் 13, 2024 - சனிக்கிழமை - 2வது சனிக்கிழமை
ஏப்ரல் 14, 2024 - ஞாயிற்றுக்கிழமை

bank
ஏப்ரல் 15, 2024 - திங்கட்கிழமை - இமாச்சல் தினம் (கவுகாத்தி மற்றும் சிம்லா)
ஏப்ரல் 17, 2024 - புதன்கிழமை - ஸ்ரீராம நவமி (அகமதாபாத், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், காங்டாக், ஐதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பாட்னா, ராஞ்சி, சிம்லா, மும்பை மற்றும் நாக்பூர்)
ஏப்ரல் 20, 2024 - சனிக்கிழமை - கரியா பூஜை (அகர்தலா)
ஏப்ரல் 21, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 27, 2024 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை
ஏப்ரல் 28, 2024 - ஞாயிற்றுக்கிழமை

Trending News

Latest News

You May Like