1. Home
  2. தமிழ்நாடு

இந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!

1

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மட்டுமே எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், தற்போது பிப்ரவரி மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களை சேர்த்து 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை காணலாம்.

  • பிப்ரவரி 4, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 10, 2024: இரண்டாவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 11, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 14, 2024: பசந்த பஞ்சமி காரணமாக திரிபுரா, ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 15, 2024: Lui-Ngai-Ni காரணமாக மணிப்பூரின் வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 18, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 19, 2024: சத்ரபதி சிவாஜி ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிராவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 20, 2024: மாநில தினம் காரணமாக மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 24, 2024: இரண்டாவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 25, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 26, 2024: நியோகம் காரணமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

Trending News

Latest News

You May Like