1. Home
  2. தமிழ்நாடு

அக்டோபர் மாதம் வங்கிகள் 15 நாட்கள் விடுமுறை!

அக்டோபர் மாதம் வங்கிகள் 15 நாட்கள் விடுமுறை!


அக்டோபர் மாதத்தில் வார விடுமுறை, உள்ளூர் விடுமுறை, வர்த்தக விடுமுறை என 15 நாட்கள் வங்கிகள் இயங்காது என தெரியவந்துள்ளது.

அக்டோபர் மாதம் பண்டிகை காலம் என்பதால் அதிக விடுமுறை நாட்கள் இருக்கும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் பாதிக்கு பாதி நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும் என தெரிகிறது.

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையுடன் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து துர்கா பூஜை, லட்சுமி பூஜை, மகாதசமி, மஹாநவமி, தசரா, மிலாத்--ஷெரீப், சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்தி, மகரிஷி ஜெயந்தி, மகரிஷி வால்மிகி ஜெயந்தி ஆகிய நாட்களில் வங்கிகள் விடுமுறை.

அதே போல் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என சேர்ந்து சுமார் 15 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. இந்த விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்றாலும் கூட சுமார் 15 நாட்கள் வங்கிகள் செயல்படாது.

ஆனால் ஏடிஎம்களில் பணம் எடுக்க எந்த தடையும் இருக்காது. எனவே அதற்கேற்றாற் போல் வாடிக்கையாளர்கள் திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

newstm.in

Trending News

Latest News

You May Like