1. Home
  2. தமிழ்நாடு

ஏப்ரல் 1ம் தேதி முதல் வங்கி சேவைகளில் வருகிறது மாற்றம்..!

1

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷன் வங்கி , கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் புதிய மினிமம் பேலன்ஸ் ரூல்சை கொண்டு வந்துள்ளன. இதன்படி, நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் அபராதமும் விதிக்கப்படும். வாடிக்கையாளர் வங்கி கணைக்கு வைத்து இருக்கும் இடம், என்ன வகையான வங்கி கணக்கு என்பதை பொறுத்து இந்த விதிகள் மாறும்.

ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, பல வங்கிகள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கட்டணங்களை திருத்தியுள்ளன. ஒரு மாதத்தில், ஏடிஎம்மில் கட்டணம் எதுவும் இன்றி பணம் எடுக்கு முறை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிற வங்கி ஏடிஎம்மில் இனி மாதத்திற்கு 3 முறை பணம் எடுக்க கட்டணம் இல்லை. அதன்பிறகு செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 முதல் 25 வரை பிடித்துக்கொள்ளப்படும். இதற்கு முன்பு 5 முறை வரை எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த விதிமுறைகள் வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

வங்கிகள் புதிய டிஜிட்டல் சேவைகளை ஏஐ உதவியுடன் கொண்டு வர இருக்கின்றன. இதன் மூலம் டிஜிட்டல் பேங்கிங் என்பது இன்னும் பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாறும். டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் பாதுகாப்பாக மாற்றும் விதமாக இரண்டு அடுக்கு உறுதிப்படுத்துதல் பயோ மெட்ரிக் வசதி உள்ளிட்டவைகள் பலப்படுத்தப்படும்.

நிரந்தர வங்கி கணக்குக்கான வட்டி மற்றும் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதங்களை சில வங்கிகள் மாற்றத்தை அறிவித்துள்ளன. டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் வட்டி விகிதம் இனி கணக்கிடப்பட உள்ளது. எஸ்பிஐ, ஐடிபிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி போன்ற முன்னணி வங்கிகள் வட்டி விகிதங்களுடன் எஃப்டி காலகட்டத்திலும்மாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளன.

எஸ்பிஐ, ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங் உள்ளிட்ட வங்கிகள் கிரெடிட் சலுகைகளில் மாற்றம் கொண்டு வர உள்ளன. விஸ்தாரா கிரெடி கார்டில் இந்த மாற்றம் வர உள்ளது. ஃப்ரீ டிக்கெட், வவுச்சர்ஸ், புதுப்பித்தல் சலுகைகள் மற்றும் மைல்ஸ்டோன் ரிவார்டுகள் நிறுத்தப்பட உள்ளன. ஆக்சிஸ்வங்கியும் விஸ்தாரா கிரெடிட் கார்டுக்கு இதே போன்ற கட்டுப்பாடுகளை ஏப்ரல் 18 முதல் கொண்டு வர உள்ளது.

Trending News

Latest News

You May Like