ஊரடங்கால் அடுத்த அறிவிப்பு.. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வங்கி சேவை ரத்து !

ஊரடங்கால் அடுத்த அறிவிப்பு.. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வங்கி சேவை ரத்து !

ஊரடங்கால் அடுத்த அறிவிப்பு.. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வங்கி சேவை ரத்து !
X

முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று முதல் 4ஆம் தேதி வரை வங்கிகளில் பொதுமக்களுக்கான சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. 

பல்வேறு மாவட்டங்களில் தளர்வுகள் உள்ள நிலையில் இந்த மாவட்டங்களில் 6ஆம் தேதி முதலே தளர்வுகளுடன் ஊரடங்கு அமலாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால், சென்னை உள்ளிட்ட  5 மாவட்டங்களில் உள்ள வங்கிக் கிளைகள் இன்று (ஜூலை 1) முதல் 4ம் தேதி வரை 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.

பெட்ரோல் பங்க்குகள், சமையல் காஸ் சிலிண்டர் விநியோகிக்கும் ஏஜென்சிகள் ஆகியவற்றுக்கான பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம்களில் பணம் நிரப்புவது உள்ளிட்ட அத்தியாவசிய சேவை மட்டுமேநடைபெறும்.

பொதுமக்களுக்கு நேரடி வங்கி சேவை கிடையாது என மாநில அளவிலான வங்கியாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.மொகந்தா தெரிவித்துள்ளார்.

newstm.in 

Next Story
Share it