வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்..?
வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நிலைமை மோசமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்.நிலைமை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாவதை உணர்ந்த அவர், தனது சகோதரியுடன் வங்கதேசத்தை விட்டே வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியது.
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் எழுந்த அசாதரண சூழல் எதிரொலியாக நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தரையிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் உள்ள ஹிண்டர் விமானப்படை தளத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலான நிலையில் ஏர் இந்தியா விமான சேவையை டாக்காவுக்கு நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் ஷேக் ஹசீனாவை அஜித் தோவல் சந்தித்துள்ளார். கலவரம் காரணமாக வங்காள தேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.