1. Home
  2. தமிழ்நாடு

டெல்லி வந்தார் வங்கதேச பிரதமர்..!

1

ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7:15 மணி அளவில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.  இந்த  நிலையில், டெல்லியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லி வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவுத் துறை செயலர் முக்தேஷ் பர்தேசி வரவேற்றார்.

இதையடுத்து, வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு முதல் சிறப்பு விருந்தினராக வங்கதேச பிரதமர் டெல்லி வந்துள்ளார். அவரை முக்தேஷ் பரதேஷி அன்புடன் வரவேற்றார். அவரது இந்த வருகையின் மூலம், இந்தியா - வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவு மேலும் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஷேக் ஹசீனா டெல்லி வந்துள்ளார்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை அடுத்து சிறப்பு விருந்தினர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு இரவு விருந்து வழங்க உள்ளார். அதில், வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like