இனி ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசிய விடுமுறை நாளாக கடைப்பிடிக்கப்படாது - வங்கதேச அரசு..!
வங்கதேசத்தல் வெடித்த கலவரத்தை தொடர்ந்து அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவருக்கு மத்திய அரசு முழு பாதுகாப்புடன் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.
ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் புதிய அரசு கடந்த வாரம் பொறுப்பேற்றது. இந்நிலையில் இடைக்கால அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது வங்கதேசத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசிய விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் ஸ்தாபக தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படுகொலையை நினைவுகூரும் வகையில் தேசிய துக்க நாளாகக் குறிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஆலோசகர்கள் குழு மற்றும் அரசியல் கட்சிகளுடன் நடந்த விவாதத்திற்குப் பிறகு இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக முகமது யூனுஸ் அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.