பெங்களூர் டேஸ் பட நடிகர் காலமானார்..!

மலையாள நடிகர் அஜித் விஜயன் தனது 57வது வயதில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இவருக்கு மனைவி தன்யா, காயத்ரி, கௌரி என இரு மகள்களும் உள்ளனர். 'ஒரு இந்தியன் பிரணாயகதா', 'அமர் அக்பர் அந்தோணி', 'பெங்களூர் டேஸ்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
அத்துடன் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவருடைய தாத்தா புகழ்பெற்ற கதகளி கலைஞர் கிருஷ்ணன் நாயர் ஆவார். விஜயனின் மறைவு மலையாளத் திரையுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.