நெருங்கி பழகிய புகைப்படங்களை காட்டி திருமணத்திற்கு தடை.. காதலன் வெறிச்செயல் !

திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியில் 29 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரும் உதவி வழக்கறிஞராக பணியாற்றி வரும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் சாம்ராட் என்பவரும் கல்லூரி படிக்கும்போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
நீண்ட காதலித்து வந்த இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமணம் செய்வதாக கூறி அப்பெண்ணிடம் இருந்து சந்தோஷ் சாம்ராட் அடிக்கடி பணம் பெற்றுள்ளார்.
ஆனால் பின்னாலில் காதலித்த பெண்ணை அவர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் பெண்ணின் குடும்பத்தினர் வேறொரு மாப்பிளைக்கு திருமணம் செய்து வைத்தனர். பின்னர் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை சந்தோஷ் சாம்ராட் அப்பெண்ணின் கணவருக்கு அனுப்பினார். இதனால் விஜிக்கு விவாகரத்தானது.
இந்நிலையில், காதலித்த விஷயம் முதல் திருமணம் நடந்து விவாகரத்து ஆனது வரை அனைத்து தகவல்களையும் சொல்லி விஜிக்கு 2வது திருமணம் செய்ய அவரது தந்தை ஏற்பாடு செய்துள்ளார்.
இதனையறிந்த சந்தோஷ் சாம்ராட் மீண்டும் அப்பெண்ணிற்கு மிரட்டல் விடுத்துள்ளார். எனக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடமாட்டேன், பணம் தராவிட்டால் புகைப்படத்தை வெளியேடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், இதுகுறித்து 2வதாக திருமணம் செய்ய உள்ள மாப்பிள்ளையிடம் கூறினார். அதற்கு அவர், இந்த காதல் விவகாரத்தை திருமணத்திற்கு முன்பே ஒட்டுமொத்தமாக முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதன்படி அப்பெண் தனது முன்னாள் காதலனான சந்தோஷ் சாம்ராட்டை தனியாக பேசவேண்டும் என அழைத்துள்ளார். அதன்படி இருவரும் கடந்த 5ஆம் தேதி சந்தித்து பேசிக்கொண்டிருந்தப்போது, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அப்பெண் அளித்த புகாரில் தலைமறைவான இருந்த சந்தோஷ் சாம்ராட்டை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
newstm.in