1. Home
  2. தமிழ்நாடு

ஆபத்தான நாய்களை வளர்க்க விதித்த தடை உத்தரவு வாபஸ்..!

1

செல்லப் பிராணிகளை வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு நாய் இனங்களை வளர்த்து வருகின்றனர். அதில் குறிப்பிட்ட 23 வகை நாய் இனங்களை அரசு ஆபத்தான நாய்கள் என்று வளர்க்க தடை விதித்துள்ளது. மேலும் இவ்வகை நாய்களை இறக்குமதி செய்வது, வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்து செயல்களுக்கும் தடை விதித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

மேலும் இந்த நாய்களை தற்பொழுது வளர்ப்பு பிராணியாக வைத்திருந்தால், உடனடியாக அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, அவை இனப்பெருக்கம் செய்யாமல் தடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது. அந்த நாய் இனங்களை கீழே காணலாம்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நாய் இனங்கள்:

  • PITBULL TERRIER
  • TOSA INU
  • AMERICAN STAFFORDSHIRE TERRIER
  • FILA BRASILEIRO
  • DOGO ARGENTINO
  • AMERICAN BULL DOG
  • BOESBOEL,KANGAL
  • CENTRAL ASIAN SHEPHERD DOG
  • CAUCASIAN SHEPHERD DOG
  • SOUT RUSSIAN
  • SHEPHERD DOG
  • TORNJAK SARPLANINAC
  • JAPANESE TOSA
  • AKITA MASTTIFFS
  • ROTTWEILER
  • TERRIERS
  • RHODESIAN RIDGEBACK
  • WOLF DOGS
  • CANARIO
  • AKBASH
  • MOSCOW GUARD
  • CANE CORSO
  • BANDONG

முன்னதாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டு இருந்த அறிக்கையில், பிட்புல் உள்ளிட்ட 23 நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. 

தற்போது வளர்ப்பு பிராணியான இந்த வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் வழிகாட்டுதல்கள் தவிர்த்து 23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. 

மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி தான் தமிழக அரசு இதனை அறிவித்த நிலையில், மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்ற தடை உத்தரவு உள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறப்பட்டதாக கால்நடை பராமரிப்புத் துறை கூறியுள்ளது.

Trending News

Latest News

You May Like