குற்றாலம் அருவியில் குளிக்க தடை..!

தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.