1. Home
  2. தமிழ்நாடு

திருட்டு சம்பவங்களை குறைக்க காவல்துறை புதிய வியூகம் !

திருட்டு சம்பவங்களை குறைக்க காவல்துறை புதிய வியூகம் !


நவம்பர் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருட்டு சம்பவங்களை குறைக்க காவல்துறை புதிய வியூகம் வகுத்துள்ளது.

தீபாவளி பண்டிகையொட்டி, தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தீபாவளிக்கு நாட்கள் நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் மேலும் அதிகரித்து வருகிறது. இதனால், திருட்டு சம்பவங்களை குறைக்க காவல்துறை புதிய வியூகம் வகுத்துள்ளது.

அதன்படி, திருடர்களை கண்டுபிடிக்க காவல்துறை பயன்படுத்தும் செயலி தொழில்நுட்பத்தை தி.நகரில் உள்ள கடைகளுக்கு வழங்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். மக்கள் கடைகளுக்கு செல்ல ஒரு பாதையும், வெளியே செல்ல ஒரு பாதையும் அமைத்து கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், செயின் பறிப்புகளை தடுக்கும் வகையில் நகை பாதுகாப்பு துணியை பொது மக்களுக்கு காவல்துறை வழங்கி வருகிறது.

மேலும், 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like