1. Home
  2. தமிழ்நாடு

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

Q

மகாராஷ்டிர மாநிலம் புணேவில், மதுபோதையில் சொகுசுக் கார் ஓட்டி சிறுவன் ஏற்படுத்திய விபத்தில், ஐடி. ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை (மே 19) அதிகாலை நடந்த இந்த விபத்தில், காரை ஓட்டிவந்த சிறுவன் 18 வயது பூர்த்தியாகாதவர்.
12ஆம் வகுப்பு படித்துள்ள அவர், தேர்வில் தேர்ச்சி அடைந்ததைக் கொண்டாடும் விதமாக சொகுசு விடுதியில் நண்பர்களுக்கு மதுபான விருந்து வைத்துள்ளார். சுமர் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அந்த மதுபான விருந்தை ஏற்பாடு செய்துள்ளார். அதன் சிசிடிவி காட்சிகளும் காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்து நேரிட்ட நிலையில், 15 மணிநேரத்தில் அந்த சிறாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. பலவேறு தரப்பில் இருந்து எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விபத்து ஏற்படுத்திய சிறாரை மைனராகக் கருதாமல் 18 வயதுக்கு மேற்பட்டவராகக் கருதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும், சிறாரின் ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்றும் சிறார் வாரியத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like