1. Home
  2. தமிழ்நாடு

பெங்களூருவில் மோசமான வானிலை... கோவைக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்..!

1

பெங்களூருவில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்து வருவதால் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால், விமானப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்த இண்டிகோ விமானம், தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்குச் சென்ற இண்டிகோ விமானம், விசாகப்பட்டினத்தில் இருந்து பெங்களூருக்குச் சென்ற விமானம், மும்பையில் இருந்து பெங்களூருக்குச் சென்ற இண்டிகோ விமானம், போர்ட் லூயிஸ்ல் இருந்து பெங்களூருக்குச் சென்ற இண்டிகோ விமானம், சிலிகுரியில் இருந்து பெங்களூருக்குச் சென்ற இண்டிகோ விமானம் என மொத்தம் 6 விமானங்கள் கோவைக்குத் திருப்பி விடப்பட்டன. 

பெங்களூரில் மோசமான வானிலை நீடிப்பதால், பிற விமானங்களும் கோவைக்குத் திருப்பி விட வாய்ப்பு உள்ளது என்று தகவல் உள்ளது. விமானங்கள் திருப்பி விடப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பெங்களூருவில் வானிலை சீரானதும் விமானங்கள் மீண்டும் பெங்களூருவுக்குத் திருப்பி விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like