பகீர் செய்தி.. இந்திய விசா நிறுத்தம்..!

வேலை விசா உட்பட சில விசாக்களை மேற்காசிய நாடான சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.வேலை விசா, இ-விசா, சுற்றுலா விசா, குடும்ப விசாவை சௌதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியா உட்பட வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்டவை 14 நாடு இந்தப் பட்டியலில் உள்ளன.
ஹஜ் காலம் நடைபெற்று வருவதால், இந்த விசாக்களை பயன்படுத்தி வருவதை தடுக்கவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.
கடந்தாண்டில் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, மற்ற விசாக்கள் வாயிலாக வந்தவர்கள், ஹஜ் பயணத்தில் சட்டவிரோதமாக பங்கேற்றனர். அதையடுத்து, இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.