உயிரிழந்த கணவரின் கட் அவுட் முன் வளைகாப்பு! நடிகையின் நெகிழ்ச்சி சம்பவம்!!

பிரபல நடிகையான மேக்னா ராஜ், உயிரிழந்த தனது கணவரின் ஆளுயர கட் அவுட் முன் தனது வளைகாப்பு நிகழ்ச்சியை கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் தமிழில் அறிமுகமான மேக்னா ராஜ் கன்னட சினிமாவில் தன்னுடன் நடித்த சக நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை பத்து ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் அர்ஜுனின் சகோதரி மகன். மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்த நேரத்தில், கடந்த ஜூன் 7 தேதி சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
உயிரற்று கிடத்தப்பட்டிருந்த சிரஞ்சீவி சார்ஜாவின் உடலைப் பிடித்து மேக்னா ராஜ் அழுதது எல்லோரது இதயத்தையும் கசிய வைத்தது. இந்நிலையில், கர்ப்பிணியாக மேக்னா ராஜ் தனது வளைகாப்பு படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில்,மேக்னா ராஜ் அமர்ந்திருக்க, அவரது அருகில் மறைந்த சிரஞ்சீவி சார்ஜா ஆளுயர கட் அவுட்டுடன் புன்னகைக்கிறார். கணவரின் கட் அவுட்டுடன் வளைகாப்பு கொண்டாடி நெகிழ்ச்சியூட்டிய மேக்னா ராஜூக்கு எல்லோரும் ஆறுதலையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
newstm.in