நொடி பொழுதில் பஸ்முன் பாய்ந்த ட்ராஃபிக் போலீசால் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை..!!
உத்தரகண்ட் மாநிலத்தில் வழக்கம் போல் நேற்று மாலை பயணிகளை ஏற்றிக் கொண்டு ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வளைவில் ரிக்ஷா வேகமாக திரும்பியபோது தாயின் மடியில் இருந்த குழந்தை எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தது.
அப்போது அங்கு போக்குவரத்தை சீரமைப்புக்கும் பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் சுந்தர் சர்மா, பேருந்து ஒன்று வருவதை கண்டு அதிர்ச்சிடைந்தார். உடனடியாக ஓடிச்சென்று கையைக் போட்டு பேருந்தை நிறுத்தும்படி சேகை காட்டினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பேருந்து ஓட்டுநரும் திடீர்ரென பிரேக் அடித்து நிறுத்தினார். அதையடுத்து பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் ஓடோடிச் சென்று குழந்தையை காப்பாற்றினார். அதன்பின் ரிக்ஷாவில் இருந்து குழந்தை கீழே விழுந்ததைப் பார்த்து அலறியடித்துக் கொண்டு வந்த தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
#WATCH | Uttarakhand: A CPU (City Patrol Unit) jawan, Sundar Sharma saved the life of a child who fell off the lap of her mother who was sitting on an e-rickshaw, amid busy traffic in Kashipur.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 13, 2022
(Source: CCTV visuals) pic.twitter.com/wpywwtAigr
குழந்தையை கண்ணிமைக்கும் நேரத்தில் பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. வீரரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.