கழிவு நீர் தொட்டியில் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ சேவை மைய ஒப்பந்த பணியாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். பழனிவேலுக்கும் சிவசங்கரி தம்பதிக்கும் பிறந்த மூன்று வயது பெண் குழந்தை லியா லட்சுமி விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். வழக்கம் போல் குழந்தையை பள்ளியில் பெற்றோர் குழந்தை விட்டு சென்றுள்ளனர்.
குழந்தையானது இயற்கை உபாதையை கழிக்க பள்ளி வகுப்பறையில் இருந்து அருகிலுள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தை கழிவறைக்கு சென்றுவிட்டு அருகிலுள்ள செப்டிக் டேங்க் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது குழந்தை செப்டிக் டேங்க் மீது ஏறியுள்ளதாக தெரிகிறது. டேங்க் மீது போடப்பட்ட இரும்பு தகடு மூடி முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. துரு பிடித்து இருந்ததால் குழந்தையின் பாரம் தாங்காமல் குழந்தை செப்டிக் டேங்க் மூடி உடைத்து கொண்டு உள்ளே விழுந்து மூச்சு திணறி இறந்திருக்கிறார். செப்டிக் டேங்க் உள்ள பகுதி அருகிலுள்ள கட்டிடத்தில் வகுப்பு எடுத்திருந்த குழந்தையின் ஆசிரியர் ஏஞ்சல் நீண்ட நேரமாகியும் குழந்தை வராததால் கழிவறை பகுதிக்கு சென்று பார்த்துள்ளார்.
எங்கு தேடியும் கிடைக்காததால் செப்டிக் டேங்க் மூடி உடைந்திருந்ததை பார்த்தபோது உள்ளே குழந்தை இறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினரே செப்டிக் டேங்க்கில் இருந்த குழந்தையை இரண்டு கம்புகள் பயன்படுத்தி மேலே தூக்கி குழந்தை மீட்டு கார் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகம் எதையோ மறைகிறது என சிறுமியின் பெற்றோர்-உறவினர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக புதிய சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது, இறந்த குழந்தையின் உடலை தூக்கிகொண்டு அலைந்து, சிறுமி செப்டிக் டேங்கில் விழுந்து பலியானதாக நடமாடியதாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும், பள்ளியின் வகுப்பு ஆசிரியை சிறுமியை தாக்கியதாகவும், சிறுமியுடன் படித்த தோழி ஒருவர், உயிரிழந்த சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல் துறை அதிகாரிகள் சிலர் செயல்படுவதாகவும், பாதிக்கப்பட்ட தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும் லியா லட்சுமியின் பெற்றோர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், பரவும் சர்ச்சைக்குள்ளான சிசிடிவி தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சிசிடிவியில் உள்ள குழந்தை, அந்த பள்ளியில் பணிபுரியும் தமிழ்செல்வி என்பவரின் கைக்குழந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியை கையில் வைத்திருந்தது இறந்த குழந்தை லியா அல்ல, அது தமிழ்செல்வியின் குழந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு குழந்தையை கையில் வைத்து கொண்டு தேடிய நிலையில், அது லியா என தவறாக பரப்பப்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் ஏற்கனவே இறந்த குழந்தையை வைத்து நாடகம் நடத்தியுள்ளனர் என்பது CCTV யில் வெளியானது!
— priya (@PriyankaSmile01) January 11, 2025
அந்த பள்ளியை இழுத்து மூட வேண்டும்..அவர்கள் அனைவரும் கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டும்.😡@tnpoliceoffl @vpmpolice @Anbil_Mahesh @CMOTamilnadu pic.twitter.com/qngUuwlUHg